கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்

66 0

ஆக, ஐ.நா மனித உரிமைகள் விதித்த நிபந்தனைகளை இன்னமும் நிறைவேற்றா தது ஏன்? என்று சர்வதேச சமூகம் கேள்வி கேட்க இருந்தபோது;

இல்லை, இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இப்போது அகாசியிடம் கதை விடுகிறார் என்றால் எல்லாம் தேர்தலை மையப்படுத்திய நடிப்பு என்பது தெரிகிறதல்லவா?

கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்

இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேசத்தின் கடமை எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னைச் சந்தித்த யப்பானின் முன்னாள் விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இலங்கைக்கான யப்பானின் விசேட தூது வராக இருந்த யசூசிஅகாசிவிடுதலைப் புலிகளுடனான சந்திப்பை பல தடவைகள் மேற்கொண்டவர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தன்னைச் சந்திக்க மறுத்தார் என்பதால் மனக்கிலேசமடைந்த அகாசி தனது தூதுப் பணியை நியாயபூர்வமாகச் செய்யவில்லை என்ற குறைபாடு தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.

அதாவது இலங்கை ஆட்சியாளர்களின் சார்பாக அகாசி நடந்து கொண்டார் என்ற கருத்து நிலை தமிழ் மக்களிடம் இருந்தது என்பதும் இங்கு நினைவுபடுத்தற்குரியது.

எதுவாயினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த வெளிநாட்டவர்கள் இருவர் உளர்.

அவர்களில் ஒருவர் நோர்வேயின் விசேட தூதுவராக இருந்த எரிக் சொல்யஹய்ம் மற்ற வர் யப்பானின் விசேட தூதுவர் அகாசி.

எனினும் யுத்தம் முடிந்த பின்னர் மேற்குறிப்பிட்ட இருவரும் தமிழ் மக்களின் அவலத்தை, தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்காமல் இலங்கை அரசாங்கம் காலம் கடத்துவது பற்றிக் கருத்துரைக்காமல், மெளனம் காத்தமை தூதுவர்களுக்குரிய தர்மத்தில் இருந்து அவர்கள் இருவரும் விலகி விட்டனர் என்ற கருத்தும் இருக்கவே செய்கிறது.

இவை ஒருபுறமிக்க, யப்பானின் விசேட தூதுவராக இருந்த அகாசி கடந்த 20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரைச் சந்தித்து உரையாடியிருந்தார்.

இதன்போது இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேசத்தின் கடமை என இரா.சம்பந்தர் அவர்கள் தூதுவர் அகாசியிடம் எடுத்துரைத்தார்.

இரா.சம்பந்தர் அவர்கள் கூறிய கருத்து நியாயமானது. இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்தினுடையது.
இது விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிடாமல் விட்டால், இலங்கை அரசாங்கத்தைத் தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை.

ஆகையால் இரா.சம்பந்தர் அவர்கள் தன்னைச் சந்தித்த அகாசியிடம் கூறிய விடயம் ஏற்புடையதே.

ஆனால் இங்கு நமது கேள்வி; ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறியவர்கள் இரா. சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

ஆக, ஐ.நா மனித உரிமைகள் விதித்த நிபந்தனைகளை இன்னமும் நிறைவேற்றாதது ஏன்? என்று சர்வதேச சமூகம் கேள்வி கேட்க இருந்தபோது;

இல்லை, இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இப்போது அகாசியிடம் கதை விடுகிறார் என்றால் எல்லாம் தேர்தலை மையப்படுத்திய நடிப்பு என்பது தெரிகிறதல்லவா?
நன்றி.
வலம்புரி