யாழ்ப்பாணம், நெல்லியடி முடக்காட்டுச் சந்தியிலுள்ள வீடொன்றில் 9 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.
வீட்டின் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்த நிலையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள், அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த 9 பவுண் நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் காலையில் எழுந்து பார்த்தபோது, அலுமாரி திறக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னரே வீட்டில் நகை திருடப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

