தமிழர்களுக்கான தீர்வை தென்னிலங்கை மக்களுக்கு வெளிப்படையாக கூறுபவருக்கே ஆதரவு – சி.வி.கே சிவஞானம்

356 0

செய்யமுடியும் என்பது தொடர்பில் தென்னிலங்கை மக்களுடன் வெளிப்படையாகக் கதைக்கக்கூடியவர் யார் என்பதை அறிந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆதரவு வழங்கும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

அவைத்தலைவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போது ஒவ்வொருகட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பதும் யாருக்கு ஆதரவு என்பதும் பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களை ஆரம்பித்துள்ளார்கள்.இந்த நிலையில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது தமிழ் மக்களின் சார்பில் செயற்படுகின்ற கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாக பல ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் கூட இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திலும் தமிழ்மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை தென்னிலங்கை மக்களுக்கு வெ ளிப்படைத்தன்மையுடன் தெளிவுபடுத்துபவர்களுக்குத் தான் ஆதரவு வழங்குவது என்ற முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் எங்களுடைய செயற்பாடுகளும் அமையும் பலரும் பல கதைகளைக்கூறுவார்கள் இவை எல்லாவற்றுக்கும் கூட்டமைப்பு பெறுப்புக்கூறாது.

அண்மையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றகட்சிகளின் ஒன்றான புளெட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கோத்தபாய ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அவர் சந்திப்பை மேற்கொண்டிருந்மையால் தான் அவருடைய நிலைப்பாடு என்ன அவர் என்ன செய்யவுள்ளார் என்பது தொடர்பில் அறியக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யார் வேட்பாளர் என அறிவிக்கப்படுகின்றாரே எமது மக்களின் நன்மை கருதி அனைவருடனும் தான் கலந்துரையாடுவார்கள் அவ்வாறு செய்வதன் மூலம் தான் அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை அறியமுடியும் அவ்வாறு அறிந்துதான் தமிழ் மக்களுக்கு என்ன செய்யமுடியும் என்பது தொடர்பில் கூட்டமைப்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபடமுடியும்.

கடந்த கால பட்டறிவுகளை வைத்து எழுத்து பூர்வமான ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதை விடுத்து அத்தகைய ஒப்பந்தங்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்களுடன் வெளிப்படையாக பேசக்கூடியவர்களுக்கே ஆதரவு வழங்கமுடியும்.

மேலும் பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளரக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டநிலையில் அவரை ஆதரிக்கிறீர்களா எனக்கேட்டபோது?

நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை பொதுஜனப் பெரமுன தற்போது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது ஏனைய கட்சிகளும் இனித்தான் அறிவிக்கவுள்ளார்கள். அனைத்து விடையங்களையும் நாங்கள் அலசி ஆராய்ந்த பின்னரே முடிவுகளை எடுப்போம்

இதேவேளை ஈழமக்கள் புரட்சிகர முன்னணி முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஜனாதிபதியின் தேர்தல் தொடர்பில் அனைத்துதமிழ்க கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பில்கேட்டபோது,

நாங்கள் தெளிவாகத்தான் இருக்கின்றோம். இணைந்து செயற்படுவதாயின் ஒன்றிணைந்து செயற்படமுடியும். ஒன்றிணையவேண்டும்என்பவர்கள் தங்களுடைய கட்சிகளின் தனித்துவங்களை பேணி ஒன்றிணைய முடியும். நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை. அவர்களாகத்தான் வெளியேறியுள்ளார்கள்.

எல்லோரும் தாங்கள் தலைவராகவேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் இருக்கிறார்களே தவிர கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு தயாராக இல்லை. கூட்டாக செயற்படுவது தொடர்பில் பலரும் பல கதைகள் கதைக்கின்றார்கள் ஆனால் அவர்களும் இணைந்தபாடில்லை. நாங்கள் தெளிவாகவே எ உள்ளோம் என்றார்.