மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது

335 0

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தலையாய பணி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு திட்டமும் உரிய காலத்தில் மக்களைப் போய் சேர்ந்துள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி கலெக்டர்கள் நேரடியாக முதல்- அமைச்சரிடம் விளக்கம் அளிப்பார்கள். அதுபோல, அரசுத் திட்டங் களை செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் பற்றி வந்த குற்றச்சாட்டுகளுக்கும் கலெக்டர்கள் பதிலளிக்க வேண்டியதிருக்கும்.
பாராட்டும், பரிசும்
மேலும் அரசு திட்டங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் தற்போதய நிலை போன்றவை பற்றியும் கலெக்டர்கள் எடுத்துரைப்பார்கள். திட்டங்களை அமல்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கி முதல்-அமைச்சர் உற்சாகப்படுத்துவார்.
எனவே ஒவ்வொரு திட்டத்தின் செயலாக்கம் தொடர்பாக பக்கம் பக்கமாக கோப்புகளை கலெக்டர்கள் தயாரித்து வைத்திருப்பார்கள்.
2 நாட்கள் ஆய்வுக் கூட்டம்
கலெக்டர்கள் மாநாடு சமீபத்தில் நடத்தப்படவில்லை. என்றாலும், அரசு திட்டங்கள் குறிப்பாக நீர் மேலாண்மை திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது என்பதுபற்றி கலெக்டர்களை நேரில் அழைத்து ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி, நாளை (வியாழக் கிழமை) மற்றும் நாளை மறுதினம் (8, 9-ந் தேதி) ஆகிய 2 நாட்களிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் கலெக்டர் களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர் களும் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து கலந்து கொள்வார்கள்.