வவுனியா சன்னாசிபரந்தன் காட்டுப்பகுதியில் இன்று கரடியின் தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா சன்னாசிபரந்தன் பகுதியில் இன்று (06.08) மாலை 3.00மணியளவில் மாடு மேய்ப்பதற்காக சகோதரர்கள் இருவர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன் போது மாலை 3.30 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய ஆகிய இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

