வவுனியாவில் பெண் மீது தாக்குதல்.

319 0

நெடுங்கேணியில் பெண் ஒருவர் மீது  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நெடுங்கேணி  கந்தரோடை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீடொன்றின் பின்னால் பாதை ஒன்று செல்கிறது. இரு தரப்பினரிடையே  பிரச்சினை காரணமாக இணக்க சபைக்கு சென்ற நிலையில் பாதைக்கு வாயிற்கதவு அமைக்குமாறும்,  போலியான உறுதி எனவும் அடுத்த வழக்கிற்கு இம்மாதம் 10ம் திகதி வருமாறும் கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் நேற்று (03.08) மாலை 6மணியளவில் பாதைக்கு பின்பகுதியிலுள்ள வீட்டிலுள்ளவர்கள் வாயிற் கதவை திறந்துவிட்டு சென்றதனால் மாடு வீட்டினுள்ளே சென்றுள்ளது. இதைக் கேட்க சென்ற பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இலக்காகிய குறித்த  26வயதுடைய பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ் விடயம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

இத் தாக்குல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.