“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”

629 0

லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை படைத்துறைக்குள்ளும் செயற்படுத்தியவன்.கடலில் எதிரிக்கு இழப்பை கொடுத்த இவன் தரையிலும் எதிரிக்கு தக்க பதிலடி கொடுத்தவன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வன்னிக்குப் போராளிகளை நகர்த்தியதிலும் வன்னியில் இருந்து மட்டக்களப்பிற்கு போராளிகளை நகர்த்துவதிலும் சிறிலங்கா கடற்படையினருக்கு தக்கபாடம் கொடுத்து போராளிகளை நகர்த்தியதில் வல்லவன்.

விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலை செய்யும் நிலைமையில் இல்லை என்று வாயுரைத்த சிறிலங்கா அரசிற்கு தக்கபாடம் புகட்டவேண்டு என கடற்புலிகளின் ஈரூடகப் படையணியை வழிநடத்தி- நெடுந்தீவின் சிறிலங்கா கடற்படையினரின் தளம் தொடக்கம்- கடற்புலிகளின் ஈரூடக படையணியால் தாக்கியழிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் தளங்களின் மீதான தாக்குதல்களில் எல்லாம் போர் புரிந்து- வழிநடத்தி எதிரியிடம் இருந்து மூன்று 50 கலிபர் துப்பாக்கிகளை கைப்பற்றிய பெருமை இவனையே சாரும்.எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன்

-கடற்புலிகளின் தளபதி நரேன் –