சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த கப்பலில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் யானை தந்தங்களும், எறும்புதின்னி விலங்கின் செதில்களும் கைப்பற்றப்பட்டன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் நாட்டுக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சிங்கப்பூர் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


