தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஏன்? என கேட்பதில் உள்நோக்கம் இருப்பதாக வைகோ தெரிவித்தார்.அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
“மேல்முறையீட்டில் தண்டனை கொடுத்தால் ஏற்பேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதால் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது” என்று வைகோ கூறினார்.
தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த தேர்வையும் எழுத முடியாத நிலை ஏற்படும் என கவலை தெரிவித்தார். இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

