ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்: 500 கிலோ வெடிகுண்டு மீட்பு!

396 0

2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக , அங்குள்ள சுமார் 16,500 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேற்படி குண்டு, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, பிரித்தானியா விமானப்படைகள் 27 இலட்சம் டன் வெடிகுண்டுகளை ஐரோப்பாவில் வீசின. இவற்றில் பல வெடிக்காத வெடிகுண்டுகள், ஜேர்மனியின் பல இடங்களில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 2,000க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் ஜேர்மனியில் இன்னும் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிராங்க்பர்ட் நகரில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைமையகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வரும்போது, 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை செயலிழப்பு செய்வதற்காக ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில், கட்டிடங்களில் வசிக்கும் சுமார் 16,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.