மாற்று ஏற்பாடு- திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ இன்று மனு தாக்கல்!

514 0

தேச துரோக வழக்கில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட வைகோ போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் இளங்கோ இன்று மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லி மேல்-சபை தேர்தலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தி.மு.க. ஒரு இடத்தை ஒதுக்கியது. அதன்படி வைகோ நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார்.

வைகோவுக்கு தேச துரோக வழக்கில் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

வைகோ

ஒருவேளை வைகோ மனு நாளை நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதில் ஒருவரை நிறுத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அதற்காக இன்று காலை தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ கோட்டைக்கு வந்தார். அவர் இன்று மனுதாக்கல் செய்வார் என்று தெரிகிறது.