பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தமிழர் திருவிழாவாக நேற்று இடம்பெற்றது .

இந்த பொங்கல் நிகழ்வின் போது வருகை தந்த மக்களுக்கு பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது .அதிகளவான மக்கள் ஒன்று கூடியதன் காரணமாக இடப் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆலயவளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடாத்தாக குடியிருக்கும் பௌத்த பிக்குவின் சட்ட விடயங்களை கையாளும் வழக்கறிஞரின் வாகனத்தை அகற்றி விடுமாறு சட்டத் தரணியிடம் ஆலய தரப்பால் கேட்கபட்டபோது அதனை மறுத்து அந்த வாகனத்தை அகற்ற முடியாது என தெரிவித்தார் . பல பேர் சென்று பிக்குவின் சட்டத்தரணியிடம் வினயமாக வேண்டியபோதும் வாகனத்தை அகற்ற முடியாது என தெரிவித்தார் .

இதனால் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் உள்ளிட்டவர்கள் வெயிலுக்கு மத்தியில் அமர்ந்து அன்னதானம் உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது . அனைவரும் சிரமபட்டு வெயிலில் அமர்ந்து அன்னதானம் உண்பதை பிக்குவின் சட்டத்தரணியும் ஏனைய பெரும்பான்மை இனத்தர்வர்களும் மனசாட்சி இன்றி நடந்துகொண்டத்தை பார்த்து பலரும் விசனம் தெரிவித்தனர் .

இருந்தும் சற்று நேரத்தில் குறித்த சட்டத்தரணியின் காரில் “தமிழ்” என்று தமிழில் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தது .

