புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் ! பயணிகள் பாதிப்பு

204 0

புகையிரத தலைமை அதிகாரிக்கு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளால் அச்சுறுத்தியதற்கு எதிர்ப்பு  தெரிவித்தே இப்போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை புகையிரதநிலைய சாரதிகள் தொழிற்சங்கம் சம்பள உயர்வு, பதவியுயர்வு காரணமாக பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டிருந்ததனால் வவுனியாவில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

வவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு பொலிஸார் மற்றும் விமானப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதனால் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. புகையிரத நிலையத்திற்குச் சென்ற பயணிகள் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

புகையிரத ஊழியர்களின் போராட்டம் காரணமாக இரு புகையிரதங்கள் வவுனியாவில் தரித்து நிற்கின்றதனையும் அவதானிக்க முடிகின்றது.