மன்னார் – ஓலுத்துடுவ வனப்பகுதியில் 126 கிலோவிற்கும் அதிக பெறுமதியான பீடியிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் வடமத்திய கடற்படைக் கட்டளைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பீடி இலைகள் நான்கு உரப்பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதேவேளை கடந்த தினங்களில் கடற்படையினரால் மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 3ஆயிரத்து 500 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டிருநதமை குறிப்பிடத்தக்கது.

