நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு. யேர்மனி, Stuttgart – 2019

723 0

16.6.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வினை பரதக்கலையில் 7ம் தரத்தை நிறைவு செய்திருந்த ஆறு தமிழாலய மாணவிகள்; பங்குபற்றியிருந்தனர்.

இத் தேர்வினை சுவிசில் உள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், யேர்மனி பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்தியிருந்தன.
தமிழாலய நடன ஆசிரியை திருமதி.சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகளான

செல்வி. விவேகா மகேந்திரகுமார்.
செல்வி காருண்யா நவராசா.
செல்வி. தினோஜா திருச்செல்வம்.

அவர்களும் தமிழாலய நடன ஆசிரியை திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவிகளான
செல்வி. மீரா செல்வரட்ணம்.
செல்வி.பிரியந்தினி சிறிகாந்தன்.
செல்வி.மேருஜா மகாலிங்கம்.
ஆகியோர் தங்களின் ஆற்றுகையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.