பாஜகவுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்

44 0

பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது.
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.