தமிழீழ விடுதலைப் புலிகள் யார்…?

3294 0

இன்று “ தமிழீழ விடுதலைப் புலிகள் “ என்ற உன்னத பெயரைப் புதிய தமிழ் புலிகள் என்ற பெயரில் இருந்து மாற்றிய நாள். இந்த நாளினை உன்னதமான, புனிதமான நாளாக மனங்களில் ஏற்ற வேண்டியது எம் கடப்பாடு. ஏனெனில் 6-7 போராளிகளுடன் ஆரம்பித்திருந்த “புதிய தமிழ் புலிகள்” பல ஆயிரம் போராளிகளுடன் தரைப்படை, வான்படை, கடற்படை என்ற முப்படைக் கட்டுமானங்களுடனும், அதற்குள் பலநூறு உப கட்டுமானங்களுடன் விரிந்து உயர்ந்து நின்றது யாவரும் அறிந்த உண்மை.

பல சவால்கள், துரோகங்களைக் கடந்து தான் எமது விடுதலைப் போராட்டம் உயர்ந்து நின்றது. சாதாரணமாக ஒரு கொரில்லா இயக்கமாக வளர முயன்ற காலத்திலேயே, கூட இருந்தவர்களின் சுய ஒழுக்கம் எம் விடுதலைப் போராட்டத்தின் தளத்தையே முதல் தடவை ஆட்டம் காட்டியது. ஆனாலும் அதைக் கடந்து அந்தப் புள்ளியில் இருந்து பிரிந்து பலர் சென்று விட்டாலும், சிலர் துரத்தப்பட்டாலும். அப் புள்ளியில் இருந்து தான் மீண்டெழுந்தது எம் தேசத் தலைவனின் தலைமையிலான விடுதலை இயக்கம்.

அன்று தொட்டு இறுதி நாள் வரை பல சவால்கள், பல ஆயிரம் துரோகங்கள். இருப்பினும், எதிலும் மனம் தளர்ந்தது இல்லை. ஒரு நாட்டின் தலைவன் எப்படியோ அப்படித்தான் மக்களும் என்று பண்டைய காலம் தொட்டு கூறுவார்கள். அதன் உண்மையை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். தமிழீழம் என்ற நாட்டின் தேசத் தலைமகன் எதற்கும் சோர்ந்ததும் இல்லை; தடைகளையும், துரோகங்களையும் தாண்டாமல் விட்டதும் இல்லை.

இத்தனை ஆயிரம் சவால்களையும் தாண்டி, சர்வதேச அளவில் தமிழன் என்ற இனத்தை புள்ளியிட்டுக் காட்டிய தமிழீழத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உன்னத நோக்கங்களோடு இன்றைய நாளில் இருந்து பயணிக்கத் தொடங்கியது தமிழீழம் என்ற கனவைச் சுமந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.

கொரில்லா இயக்கமாக இயங்கிய காலங்களில் எல்லாம் எதிரிக்கு விளங்கிய எம் புலிகள், எதிரியைக் கலங்கடிக்க வைக்கும் சிறு தாக்குதல்களை செய்து வந்த புலிகள் மரபு வழி இராணுவக் கட்டமைப்பாக வளரத் தொடங்கிய போது இராணுவ முகாம்கள் மீதான வலிந்து தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. இராணுவம் மற்றும் அரசியல் என்ற மட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களைக் கொண்ட விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு, பின் நாட்களில் தமிழீழ அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாகவும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிழல் அரசாக மாற்றங்கண்டது. சாதாரண ஒன்றல்ல.

புலனாய்வுத்துறை, அரசியல்துறை, நிதித்துறை என ஆரம்பித்த கட்டுமானங்கள் 1991 சித்திரை 04 ஆம் நாளில் இருந்து தொடங்கிய முதலாவது மரபுவழி இராணுவப்படையணியாக “சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” உருவாகியதோடு இராணுவக்கட்டமைப்பிலும் புது வடிவம் பெறுகிறது.

“பயிற்சி, தந்திரம், துணிவு “ என்ற மூன்று ஒற்றைச் சொற்களுக்குள் உள்ள உயரிய சிந்தனையின் வெளிப்பாடுகளை கொண்டமைந்ததாக அப்படையணிக் கட்டுமானம் களங்காணத் தொடங்கியது. அதே நேரம் சிறப்புப் படையணியாக சிறுத்தைப் படையணியும் / மகளிர் உருவாக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக வெளிவராத சண்டையணியாகவே சாதித்தது அப் படையணி.

இது தவிர ஏற்கனவே இருந்த பிரிவுகள் சில மீள் கட்டமைக்கப்பட்டும் புதியவை உருவாக்கப்பட்டும் உயர்ந்தது விடுதலை அமைப்பு. விடுதலைப் புலிகளின் ஆரம்பம் தரைப் புலிகளாகவே இருந்தது. ஆனால் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சி அடையும் போது விரிவாக்கப்பட்ட இவ்வமைப்பு பல பிரிவுகளாக இயங்கத் தொடங்கியது.

தரைப்புலிகள்

சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி
ஜெயந்தன் படையணி
இம்ரான் பாண்டியன் படையணி
– அதிவேக உந்துருளி அணி
– விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணி / மகளிர்
– சூரன் கவச அணி / மகளிர்
ராதா படையணி / மகளிர்
– யேசு பாதுகாப்பு அணி
– அனைத்துலகத் தொடர்பகம்
– வான் எதிர்ப்பு ஏவுகணையணி
– வான் கண்காணிப்பு அணி
செண்பகம் தாக்குதல் அணி (Sniper )
உள்ளக பாதுகாப்பு அணி
படையப் புலனாய்வு / மகளிர்
சோதியா படையணி
அன்பரசி படையணி
மாலதி படையணி
சிறுத்தைப் படையணி / மகளிர்
தரைக் கரும்புலிகளணி / மகளிர்
பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு
கிட்டு பீராங்கி படையணி
லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி / மகளிர்
விசேட வேவுப் பிரிவு / மகளிர்
தொலைதூர தாக்குதல் அணி (LRRP)
வரைபடப் பிரிவு / மகளிர்
முறியடிப்பு அணி
படையத் தொடக்கப் பயற்சிக் கல்லூரி
எல்லை படை
துணைப்படை
கணணிப் பிரிவு / மகளிர்
– மென்பகுதி
– மென்பொருள் கட்டுமானப்பகுதி
– தொழில்நுட்பக் கல்லூரிகள்
– வன்பகுதி
– கொள்வனவுப்பகுதி
– சிறப்புத் தாக்குதல் அணி
போர்க்கருவி தொழிலகம் / மகளிர்
படைய அறிவியற்கல்லூரி
– மொழியாக்கப் பிரிவு
சமராய்வு மையம்
கப்டன் நளன் வானொலி தொலைத் தொடர்புப் பிரிவு
போர்ப்பயிற்சி ஆசிரியர் கல்லூரி

பின் நாட்களில் “கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு எமது கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காகவும் நடவடிக்கைகளுக்குமாக பரிணாம வளர்ச்சி பெற்றது அதுவே

கடற்புலிகள்

கடற் தாக்குதலணி
– சார்ள்ஸ் தாக்குதலணி
– நளாயினி தாக்குதலணி – மகளிர்
அடிப்படை பயிற்சிக் கல்லூரி
நிரோயன் கடற்படைக் கல்லூரி
சேரன் ஈரூடக தாக்குதலணி
கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு ( சுலோஜன் என்று இருந்த அணி 2008 இல் இருந்து கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவாக மாற்றமடைந்தது)
அங்கையற்கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு – மகளிர்
படகு கட்டுமான பிரிவு
– சண்முகம் படகு கட்டுமானம்
– மங்கை படகு கட்டுமானம் – மகளிர்
கடற்கரும்புலிகள் அணி
– புகழரசன் படையணி
– செவ்வானம் படையணி – மகளிர்
சிறப்புப் படையணி
– கப்பல் பிரிவு
– விசேட பணி
இயந்திரவியல் / மகளிர்
– உள் இணைப்பு இயந்திரத் துறை
– வெளியிணைப்பு இயந்திரப் பிரிவு
– டீசல் இயந்திரப் பிரிவு
பொறியியல் துறை
லெப் கேணல் மலரவன் வெடிமருந்துப் பிரிவு
பாக்கியன் படையணி
புனிதா படையணி – மகளிர்
கடற்புலிகளின் தரைத் தாக்குதல் அணி

 

1980 களின் நடுப்பகுதியிலையே திட்டமிட்ட

வான் புலிகளின் கட்டமைப்பானது அதற்கான தயார்படுத்தல்களுடன் நகர்ந்தாலும் ஒரு தசாப்த்தம் கடந்தே அதற்கான அத்திவாரம் இடப்பட்டு கட்டமைப்பு உருவாக்கம் கண்டது.

அதுவே வான்புலிகள்

வானூர்தி தொழில்நுடபம்
வானோடிகள்
வானூர்தி ஓடுதளம் / பாதுகாப்பு
விமான தாக்குதல் படையணி
வான் கண்காணிப்புப் பிரிவு

இதை விட சண்டை/ நிர்வாக / மக்கள் சார் நடவடிக்கைகளுக்காக பல கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

அவையாவன:

தலைமைச் செயலகம் / மகளிர்

தலைவருக்கான தனிச்செயலகம்.
வெடிபொருள் களஞ்சியம் / விநியோகம்
ஆயுத களஞ்சியம் / பராமரிப்பு/ விநியோகம்
அறிக்கை / ஆவணப்பகுதி
மாவீரர் ஆவணப்பகுதி
நிர்வாகச் செயலகம்
மக்கள் தொடர்பகம்
செஞ்சோலை / காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்கள்
தேசிய உட்கட்டுமான பாதுகாப்புப் பிரிவு
மணாளன் தாக்குதலணி
அரசியல் துறை / மகளிர்

மாவீரர் பணிமனை
கொள்கைமுன்னெடுப்புப் பிரிவு
தாக்குதலணி
யாழ் செல்லும் படையணி / மகளிர்
சமாதான செயலகம்
தமிழீழ விளையாட்டு துறை
தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
தமிழீழ கலை பண்பாட்டு கழகம்
திட்டமில் செயலகம்
சூழல் நல்லாட்சி ஆணையம்
வனவள பாதுகாப்பு பிரிவு
பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
– பயிரமுது தொழிற்சாலை ( இயற்கை உரம்)
– பொருண்மிய வங்கி
– பொருண்மிய மதியுரையகம்
– கிராமிய வங்கி
காலநிலை அவதானிப்பு நிலையம்
அர்ச்சுனா ஓளிக்கலைப்பிரிவு
ஊடகப்பிரிவு
– தமிழீழ தேசிய தெலைக்காட்சி
– நிதர்சனம்
– புலிகளின் குரல்
– தமிழீழ வானொலி
– ஈழநாதம்
– சுதந்திரப் பறவைகள்
– விடுதலைப்புலிகள் ஏடு
– வெளிச்சம்
– நாற்று
– விழி மருத்துவ இதழ்
– கணிநுட்பம் தொழில்நுட்ப இதழ்
– படியுங்கள் அறியுங்கள் (உள்ளக இதழ்- போராளிகளுக்கு மட்டும்)
– திரைப்பட உரைவாக்கப் பிரிவு
தமிழீழ மாணவர் அமைப்பு
– சிறுவர் இல்லங்கள்
– கல்வி நிறுவனங்கள்
– கணனி நிலையங்கள்
அனைத்துலகத் தொடர்பகம்
மாவீரர் குடும்ப நலன் காப்பகம்
மக்கள் தொடர்பகம்
ராஜன் கல்விப் பிரிவு
நவம் அறிவுக் கூடம்
தமிழீழ நீதிநிர்வாகம்
– தமிழீழ நீதி மன்றம்
– சட்ட ஆக்க கழகம்
– சட்டக் கல்லூரி
– தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
– முன்பள்ளி மேம்பாட்டு பிரிவு
– தொழில்பயிற்சி மையம்
– கல்வி பொருளாதார ஆய்வு அபிவிருத்தி நிறுவனம்
– சிறுவர் இல்லங்கள்
நிர்வாகசேவை
– நிர்வாகம்
– புள்ளவிபரம்
– காணிப்பகுதி
– திட்டமிடல் ஆலோசனை பகுதி
– நிதிப்பகுதி
– நில அளவை பகுதி
– கூட்டுறவுப் பகுதி
– பொறியியல் பகுதி
– உள்ளூராட்சி மன்றம்
– மேம்பாட்டுப் பகுதி
– ஆய்வு அபிவிருத்தி நடவடிக்கை நிறுவனம்
ஊரகவளர்ச்சி பிரிவு
– சிறுவர் போசாக்கு பராமரிப்புப் பூங்கா
– மின் வழங்கல்
– கிராம அபிவிருத்தி செயற்பாடுகள்
அரசியல் துறை தாக்குதல் படையணி / மகளிர்
மருத்துவ பிரிவு

– சுகாதாரசேவை
– 1) தாய்சேய் நலன் காப்பகம்
– 2) தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு
– திலீபன் மருத்துவ சேவை
– Dr பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை
– தமிழீழ மருத்துவக் கல்லூரி
– தமிழீழ தாதியர் கல்லூரி
– மருத்துவ கல்லூரி ( பொதுமக்களுக்கானது)
– நலவாழ்வு அபிவிருத்தி மையம்
– களமருத்துவம்
– மருந்தகங்கள்
– போசாக்கு உணவுத் தயாரிப்பு நிலையம்.
புலனாய்வுத் துறை

உள்ளக புலனாய்வு
போக்குவரவு கண்காணிப்புப் பிரிவு
வெளியக புலனாய்வு
சர்வதேச புலனாய்வு அணி
நிர்வாக புலனாய்வு
நிதிப்புலனாய்வு
தாக்குதல் அணி
ஊடுருவல் முறியடிப்பு
மறைமுக உறுப்பினர்கள்
முகவர்கள்
இரகசிய நடவடிக்கை அணிகள்
புலனாய்வுத்துறை தாக்குதலணி / மகளிர்
நிதித்துறை / மகளிர்

நிர்வாக நிதிபிரிவு
ஆயப்பகுதி
வருமானவரி பிரிவு
தமிழீழ வழங்கல் பிரிவு
தமிழீழ வைப்பகம்
கொள்வனவுப் பகுதி
தமிழீழ பேக்குவரத்து கழகம்
வாகனப்பகுதி
உணவுப்பகுதி
தமிழ் மொழி காப்பு கழகம்
கணக்காய்வுப்பிரிவு
வாணிபப் பிரிவு
கொடுப்பனவுப் பிரிவு
நிதித் துறை தாக்குதல் அணி
தமிழீழ காவல்துறை

குற்றத்தடுப்புபிரிவு
விசாரணைப் பிரிவு
வீதிப் போக்குவத்துக் கண்காணிப்புப் பிரிவு
தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி
விசேட அதிரடிப்படைப் பிரிவு – ( மக்கள்)
சீர்திருத்தப்பள்ளிகள்
( இது என் அறிவுக்கு எட்டியவரை தொகுக்கப்பட்டது. இவை பல்வேறு காலப்பகுதியில் இருந்தவை சில பிரிவுகள் இல்லாமல் போயிருக்கலாம். இது முழுமையாக சரியானதா என்று தெரியவில்லை. இதில் என் நினைவுக்குத் தப்பியவையும் இருக்கலாம், அல்லது எனக்குத் தெரியாமலே இருக்கலாம். அதனால் தெரிந்தவர்கள் இது பற்றி அறிய தாருங்கள். )

(புலர்வுக்காக எழுதியது இ.இ. கவிமகன்)

என பல்வேறு கட்டமைப்புக்களாக நிமிர்ந்து நின்றது.

இவற்றை விட ஒவ்வொரு களமுனைகளையும் ஒருங்கிணைத்து

வடபோர்முனை கட்டளைப்பணியகம்
மன்னார் கட்டளைப்பணியகம்
மணலாறு கட்டளைப்பணியகம்
வவுனியா கட்டளைப்பணியகம்
மட்டக்களப்பு கட்டளைப்பணியகம்
அம்பாறை கட்டளைப்பணியகம்
திருகோணமலை கட்டளைப்பணியகம்
எனவும் படையணிகள் நிமிர்ந்து நின்றன. இவற்றை விட ஒவ்வொரு படையணிகளுக்குள்ளும் பிரதான பிரிவுகளுக்குள்ளும் அரசியல், புலனாய்வு, மருத்துவம், மாவீரர் பணிமனை மற்றும் மக்கள் தொடர்பகம் வாகனம், நிதி, என பல உப அணிகள் இயங்கின.

இவ்வாறாக நிமிர்ந்து நின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ நிழலரசானது எவ்வாறு மௌனித்துப் போனது என்பது தான் வினாவாக தொக்கி நிக்கின்றது.

அமரிக்க வல்லரசு கூட ஆனையிறவை புலிகளால் மீட்க முடியாது என்று கருத்துரைத்த போதும் ஆனையிறவை தம் வசமாக்கிய புலிகள் அல்லது உலகத்திலையே இனவிடுதலைக்காக போராடிய எவ்வமைப்பும் கொண்டிருக்காத முப்படைக் கட்டுமானத்தை வைத்திருந்து சிங்களத்தின் கோட்டைக்குள்ளே புகுந்து விமானத் தாக்குதலைச் செய்து திரும்பிய வான்படையை வைத்திருந்த புலிகள், ஏன் பின் நாட்களில் தோல்வியடைந்தார்கள் என்ற வினாவுக்கு மட்டுமே விடை தேட வேண்டியவர்களாகின்றோம்.

எத்தனையோ துரோகங்களை, சோதனைகளைக் கடந்து நிமிர்ந்த விடுதலைப் போராட்டம், இனவழிப்பு சிங்கள தேசத்தால் அழித்து விட

முடியாத சக்தியாக வளர்ந்து நின்ற போது, சர்வதேச சக்திகளால் இலங்கைக்குள் இருக்கும் பூலோக சாத்தியங்களை பயன் பெற முடியாத சூழல் உருவாகி இருந்ததை மறுக்க முடியாது. இலங்கை என்பது முக்கிய பூலோக நிலையை கொண்டமைந்ததால் வல்லரசு நாடுகள் அனைத்துக்கும் முக்கியம் வாய்ந்த நாடாக இருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ அரசினால் சர்வதேச வல்லரசுகளால் இலங்கையை தாம் நினைத்த பாட்டுக்கு அசைக்க முடியவில்லை. அதோடு இந்திய வல்லாதிக்க சக்திகளுக்கு தமிழீழம் என்ற உன்னத நாடு விடுதலை அடைந்தால் நிச்சயமாக தம் பூலோக அரசியலை செய்ய முடியாத சூழல் உருவாகும்.

இதை எல்லாம் கருத்திலெடுத்த சர்வதேச சக்திகள் “சமாதானம்” என்ற ஒரு மாயையை எம் மீது விரித்து அதனூடாக தமிழீழத்துக்குள் உள்நுழைந்தார்கள்.

இங்கே தான் சர்வதேசத்தின் துரோகம் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது. அது முள்ளிவாய்க்கால் எனும் முற்றுப்புள்ளியில் எம் ஆயுதப் போராட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்ததை யாரும் மறுக்க முடியாது.

“அரசியல் வழியில் நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். விடுதலைப் போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் மாறாது “ இப்படியெல்லாம் இன்று மேடைகளில் பேசும் நாம் கடந்து விட்ட 10 ஆண்டுகளில் எதை செய்தோம் என்பதுவே எனது கேள்வி.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைப் பெற்றோமா?
காணி அபகரிப்புக்களுக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தோமா?
இனவழிப்புச் செய்த சிங்கள வல்லாதிக்க சக்திகளை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றி எம் நீதிக்கான தண்டனைகளை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்தோமா?
தாயக பிரதேசம் எங்கும் பரவி வாழ்ந்து வரும் எம் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரங்களை சரிப்படுத்தி அவர்களுக்கு வாழ்வை உறுதிப்படுத்தினோமா?
சரியான அரசியல் தலைமை ஒன்றை நாம் இனங்கண்டோமா?
பல ஆயிரம் உயிர்களை முள்ளிவாய்க்காலில் பறி கொடுத்து, பல லட்சம் அங்கங்களை இழந்து, சிங்களத்தின் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சிகளாக இன்றும் வாழும் எம்மால் கடந்து விட்ட 10 ஆண்டுகளில் ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் கொண்டுள்ள சர்வதேச நாடுகளை எம் பக்கம் திருப்ப முடிந்ததா? அவர்களின் மனச்சாட்சிகளைத் தட்டி எமக்காக குரல் கொடுக்க வைக்க முடிந்ததா?
இன்று ஒரு நாளில் சிங்கள இனவழிப்பாளர்களின் பின்புலத்தோடு முஸ்லீம் தீவிரவாதிகளால் நடாத்தி முடிக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலால் இறந்த தமிழ் உறவுகளுக்காக அணி திரண்டு நிற்கும் சர்வதேச ஊடகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன் நடாத்தப்பட்ட இனவழிப்பைக் கண்டு கொள்ளாது இருந்ததுக்கான காரணத்தை எம்மால் இனங்காண முடிந்ததா?
புலம்பெயர் தேசம் எங்கும் பற்றி எரிந்த அமைதி வழிப் போராட்டங்களைக் கூட கண்டு கொள்ளாத அரசுகளுக்கும், அந்நாட்டு ஊடகங்களுக்கும் எம்மால் இன்று வரை என்ன செய்ய முடிந்தது?
இவ்வாறு பல வினாக்களுக்கான விடையாக ஒன்றை மட்டுமே என்னால் சொல்ல முடியும்.

அன்று ஒற்றைப் புலி ஒன்று நல்லூர் மண்ணில் நடாத்திய பசிப் போர் எவ்வாறு தமிழீழ மக்களை மட்டுமல்லாது அனைத்துலகையும் திரும்பிப் பார்க்கவைத்து 5-6 லட்சம் மக்கள் நல்லூரில் கூடி தமிழ் மக்களின் ஒற்றுமையை திலீபன் என்ற ஒற்றை உயிர் காக்க வேண்டும் என்ற துடிப்போடு காட்டினார்களோ,

ஆயிரம் ஆயிரம் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், இறுதி மணித்துளி வரை முள்ளிவாய்க்கால் வரை தலைவருடன் பயணித்து வந்த மக்கள் தலைவருடன் நாம் உள்ளோம் என்று ஒற்றுமையை காட்டினார்களோ,

“பொங்குதமிழ் “ என்றெழுந்து பல லட்சம் பேர் நிமிர்ந்து நின்று எம் உணர்வுகளை வெளிப்படுத்தினோமோ,

அதைப்போல இன்று புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து வரும் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை சாடுதலை விடுத்து,

தேசியத் தலைமகன்

“ நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள்”

என்று கூறியதைப் போல அவன் துரோகி நான் நல்லவன் என்ற பாகுபாடுகளை விட்டெறிய வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் சின்ன சின்ன விற்பனையகங்கள் போல அமைப்புக்களை கொண்டு இயங்குதலை விடுத்து அனைவருக்குள்ளும் ஒரு சமரசமான ஒற்றுமையை உருவாக்கி 2009 இல் எவ்வாறு புலம்பெயர் மண் போராட்டக்களங்களால் நிறைந்து கிடந்ததோ அதைப் போல மீண்டும் ஒரு பெரும் எழுச்சியை உருவாக்குதல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஐ.நா முன்றலில் கூடிய 30000-40000 மக்கள் கரும்பு தேய்ந்து கட்டெறும்பான கதையாக 500-600 க்குள் வந்து நிற்பதற்கான காரணத்தை ஆய்வு செய்து ஒற்றுமையுடன் செயற்படுங்கள்.

நீங்கள் அனைவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்ற உன்னதமான ஆத்மாவை மனதில் நிறைத்துப் பயணிப்பவர்களாயின் எவருடனும் முரண்பாடுகளை வளர்க்காது சமரசம் எனும் செயற்பாடுகளூடாக அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கத் தலைப்படுவீர்கள் என்று நம்புகிறேன். இது தனிப்பட்ட ஒரு அமைப்பையோ அல்லது தனிநபரையோ குறித்துக் கூறவில்லை. இது அனைவரும் உணர வேண்டிய ஒன்று என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய நாள் புனிதமான பெயர் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் என்று சமூக வலைத்தளங்களில் எழுதி விட்டு அல்லது ஒருவன் எழுதியதை பிரதி எடுத்து பதிவேற்றி விட்டு கடந்து விடாது நியங்களை உணர்ந்து செயற்படுவீர்கள் என்று நம்புகிறேன். அது மட்டுமே எம் மாவீரர்களுக்கும், தலைமகனுக்கும் அநியாயமாகச் சாவடைந்த மக்களுக்கும் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய கைமாறு என்பதை கவனத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செயற்படுவோம்…

(புலர்வுக்காக எழுதியது இ.இ. கவிமகன்)

நன்றி புலர்வு.