யேர்மன் தலைநகரில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற “விடுதலை மாலை” எழுச்சி நிகழ்வு.

503 0

தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம் சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு , சிறப்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களுக்கான  தூபிக்கும் கல்லறைகளுக்கும்   மக்கள் மலர் தூவி சுடர் வணக்கம் செலுத்தனர்.


மாவீரர்களின் நினைவுரைகள் பகிரப்பட்டு, சமகால அரசியல் தொடர்பான எழுச்சி உரையுடன் , சிறுவர்களின் எழுச்சி நடனங்களும் அதேவேளையில் எழுச்சிப் பாடலுடன், கவிதை இசை வணக்கம் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அரங்கேறியது.
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை நிலைநாட்டவும் ,தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கவும் 10 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் மே 18 Düsseldorf மாநகரில் நடைபெறும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக பேர்லின் வாழ் மக்களை ஒருங்கிணைக்கும் முகமாக தகவல்கள் அறிவிக்கப்பட்டது.  


புலம்பெயர்ந்து பிறந்தாலும், வாழந்தாலும் தமது வேர்களை தேடும் பயணத்தை இவ் நிகழ்வில் அரங்கேறிய சிறார்களின் எழுச்சி ஆக்கங்களிலிருந்து காணக்கூடியதாக அமைந்தது. தாயக உறவுகளின் சுதந்திர வாழ்வுக்காக , அவர்களின் இருப்புக்காக தொடர்ந்தும் ஓர்மத்துடன் சற்றும் சளைக்காமல் குரல்கொடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொண்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன்  விடுதலை மாலை நிறைவுபெற்றது.