டிரம்புடன் 3-வது உச்சிமாநாடா? – நிபந்தனை விதிக்கிறார் கிம் ஜாங் அன்

14 0

வடகொரிய தலைவரை 3-வது முறையாக சந்தித்து பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் கிம் ஜாங் அன் நிபந்தனை விதித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர்.

அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ந்தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது.

அணு ஆயுதங்களை ஓரளவுக்கு கைவிடவே, தன் மீதான பொருளாதார தடைகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் கூறியதே, பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என அமெரிக்கா கூறியது.

ஆனால் வடகொரியாவோ, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பொருளாதார தடைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறினோம் என தெரிவித்தது.

இந்த நிலையில், இப்போது 3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இதை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதுபற்றி வடகொரிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, ‘‘இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடனும், சரியான அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முன்வந்தால், 3-வது உச்சி மாநாடு நடத்தி சந்திக்க நாங்கள் விரும்புகிறோம்’’ என குறிப்பிட்டார். 

Related Post

மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி

Posted by - April 3, 2018 0
மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் 4 பேர்…

சோமாலியா முன்னாள் பிரதமர் முகமது அப்துல்லாஹி புதிய அதிபராக தேர்வு

Posted by - February 9, 2017 0
சோமாலியா நாட்டின் புதிய அதிபராக முன்னாள் பிரதமராக இருந்த முகமது அப்துல்லாஹி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் குறித்து விசாரணை

Posted by - January 2, 2017 0
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, வர்த்தகர்களிடம் இருந்து பெறுமதியான பரிசுகளை பெற்றுக்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில், இஸ்ரேலிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். பொது வாழ்வில் உள்ள ஒருவர்…

பாகிஸ்தானை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது!

Posted by - March 8, 2019 0
படைகளை பயன்படுத்தியோ அல்லது படைகளை பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில்…

ஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்

Posted by - June 4, 2018 0
ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு, தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் மன்னிப்பு கேட்டுள்ளார்.