உலகின் மிகப்பெரிய விமானம் – முதல்முறையாக பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கியது!

11 0

உலகின் மிகப்பெரிய விமானம் தனது முதல் பயணத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோராப்ட்’ கம்பெனியை 1975- ஆண்டில் பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாக தொடங்கியவர் பால் ஆல்லென்.

வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க இவர் தீர்மானித்தார்.

இதன் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் ‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக (அமெரிக்கா நேரப்படி 13-4-2019 அன்று காலை 6.58 மணியளவில்) பறக்க விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.

அதன்படி, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்த ‘மெகா’ விமானம் புறப்பட்டு சென்றது.

மோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்த இந்த விமானம் புறப்பட்ட இடத்தில் பத்திரமாக தரையிறங்கி புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

இரட்டை விமானத்தைப் போன்ற உடலமைப்புடன் 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும். இதை நிறுத்தி வைக்க ஒரு பெரிய கால்பந்து திடல் அளவிலான இடம் தேவை.

ஆனால், இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் பால் ஜி ஆல்லென் கடந்த 15-10-2018 அன்று தனது 65-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Post

அமெரிக்காவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - February 6, 2017 0
அமெரிக்காவுக்கு ஏதேனும் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு அமெரிக்க நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஏழு நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு டொனால்ட்…

ஆப்பிரிக்க அகதிகள் படகு மத்திய தரைக்கடலில் மூழ்கியது: 23 பேர் பலி

Posted by - November 4, 2017 0
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர்.

வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியது

Posted by - February 21, 2017 0
வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த, வீடியோ பதிவுகள் மலேசியாவின் பல்வேறு இணையதளங்களில் நேற்று வெளியாகி…

பன்னாட்டு இஸ்லாமிய ராணுவ தலைவராக ரகீல் ஷெரிப் தேர்வு – ஈரான் அதிருப்தி

Posted by - April 5, 2017 0
சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஐகோர்ட்டு நீதிபதி நீக்கம்!

Posted by - October 13, 2018 0
பாகிஸ்தானில் நீதிமன்ற நடவடிக்கையில் உளவுத்துறை தலையிடுகிறது என புகார் கூறிய இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சித்திக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.