சுவாதிக்கு அறிமுகம் இல்லாதவர் கொலையை செய்து இருக்க முடியாது

495 0

201606280741401067_swathi-murder-case-investigation-Trichy-Railway-SP-interview_SECVPFசுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் கொலையை செய்து இருக்க முடியாது என்றும், சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் திருச்சி ரெயில்வே எஸ்.பி. ஆனி விஜயா தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சி ரெயில்வே எஸ்.பி. ஆனி விஜயா சென்னைக்கு வந்து கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.  சுவாதியின் உறவினர்கள், நண்பர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டும் வருகிறார். நேற்று காலை சுவாதியின் வீட்டுக்கு ஆனி விஜயா சென்றார். அங்கு அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக ஆனி விஜயா நிருபரிடம் கூறியதாவது:

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி அரிவாளால் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவமாக அமைந்து இருக்கிறது. சுவாதி கொலையில் புதிய வீடியோ படங்கள் போலீசிடம் சிக்கி உள்ளன. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது. அதை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் நாங்கள் விசாரணையை நடத்தி வருகிறோம். சுவாதியின் தனிப்பட்ட தன்மைகள், அவரது செயல்பாடுகள் மற்றும் குணாதிசியங்கள் எப்படி இருக்கும்? அவளுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன? என்பது தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

வீட்டில் சுவாதி எப்படி நடந்து கொள்வார்? எப்படி இருப்பார்? என்பது தொடர்பாக அவரது தந்தை மற்றும் உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள்.நிச்சயமாக சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த கொலையை செய்திருக்க முடியாது. அது மட்டுமே தற்போதைய நிலையில் சொல்ல முடியும். எனவே எல்லா வழிகளிலும் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்து வருகிறோம். நிச்சயம் கொலையாளியை விரைவில் நெருங்கி விடுவோம். இவ்வாறு ஆனி விஜயா தெரிவித்தார்.

Leave a comment