தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சிறுமியை அழைத்து சென்று கர்ப்பமாக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

372 0

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள தோட்டப்பகுதி ஒன்றில் 13வயது சிறுமியை தொழிலுக்கு அழைத்து சென்று கர்ப்பமாக்கபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பேலியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று திங்கட் கிழமை  கொழும்பு அலுத்கடை நீதிமன்றில் முன்னிலை படுத்தபட்ட போது எதிர் வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அலுத்கடை நீதவானால் உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ளது .

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டப்பகுதி  ஒன்றில் உள்ள 13வயது சிறுமியை தொழில் பெற்றுதருவதாக கூறி கொழும்பு பகுதிக்கு அழைத்து சென்ற 40வயது நபர் குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற் உட்படுத்தியதில் வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

பெண்ணின் உடல் நிலை மாற்றத்தினால் கொழும்பில் இருந்து தனது வீட்டிற்க்கு  சென்ற சிறுமியை சிறுமியின் தாய் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்று வைத்தியசாலையின் வைத்தியர்களால் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தி அதிகாரியின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்  தொடர்பில்  சிறுமியை விசாரனைகளுக்கு உட்படுத்திய பொலிஸார் நடந்த சம்பவத்தினை வாக்குமுலமாக பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்து குறித்த சந்தேக நபர் கொழும்பு பகுதியில் தொழில்புரிந்து வருவதாகவும் சந்தேக நபர் தொடர்பான விடயத்தினை பேலிகொட பொலிஸாருக்கு வழங்கபட்டதை அடுத்து சந்தேக நபர் பேலியாகொட பொலிஸாரினால் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகவீளில் இருந்து தெரியவந்துள்ளது.

கர்ப்பம் தரித்த சிறுமி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதி விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.