2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை

348 0

வரவு செலவு திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவு திட்டத்தை கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

இதனை தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் மீதான 2 ஆம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமானது. 

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வரவு செலவு திட்ட மீதான 3 ஆம் வாசிப்பின் குழு நிலை விவாதம் நாளை  ஆரம்பமாகவுள்ளது. 

இந்த விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு வரை நடைபெறவுள்ளன.

ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரவு செலவு திட்ட 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள குழு நிலை விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சு அலுவலகங்கள், அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட 25 விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.