கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர வேண்டும்

547 0

201606280913339251_katchatheevu-issue-all-parties-should-urge-Central_SECVPFகச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கும்பகோணம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-வருகிற 18-ந் தேதி காமராஜர் பிறந்த தினத்தையொட்டி த.மா.கா. சார்பில் திருப்பூரில் மிக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.மேலும் த.மா.கா. உள்ளாட்சி தேர்தலில் தனித்துவத்துடன் போட்டியிடும் எண்ணத்தில் மாநில, மாவட்ட, நகர, பேரூராட்சி, உள்ளாட்சி மற்றும் கிராம பகுதிகளில் கட்சியை பலப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறேன்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர்கள் கூட்டம், செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம், இளைஞரணி ஆலோசனை கூட்டம் ஆகிய பல்வேறு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதால் தொண்டர்களிடையே த.மா.கா-வுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

கரும்புக்குரிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் சுமூகமாக பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் விவசாய கடன்களை பாரபட்சம் இன்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்தது உள்கட்சி பிரச்சனை. எந்த ஒரு உள்கட்சி பிரச்சினையில் தலையிடுவதும் தனிப்பட்ட விமர்சனம் செய்வதும் கிடையாது.

கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ராம்குமார், மாநில செயலாளர்கள் சக்திவடிவேல், ஜிர்ஜிஸ், மாநில இணைச்செயலாளர் சாதிக் அலி, செய்தி தொடர்பாளர் முருகன், மாவட்ட மாணவரணி தலைவர் தினேஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Leave a comment