சோதனைச் சாவடியை விடுவித்து அவ்விடத்தில் புதிதாக காவலரன் – வலி.வடக்கில் இராணுவத்தின் மறைமுக செயற்பாட்டால் அச்சம் – (படங்கள் இணைப்பு)

599 0

K800_IMG_0790வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகன காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியினை அகற்றுவது போல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் இரகசியமான முறையில் புதிய ஒரு காவலரணை அமைத்து மக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதைக் காணக் கூடியதாக உள்ளது.
இராணுவத்தின் மறைமுகமான செயற்பாடானது அங்கு சென்று வரும் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக இறுதியாக விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காங்கேசன்துறையிலும் 63 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது காங்சேன்துறை வீதியில் இராணுவம் அமைத்திருந்த சோதனைச் சாவடியில் இருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம்வரைக்கும் உள்ள ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதி விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோப பூர்வமான சான்றிதழ்கள் வழங்குவதற்கான அப்பகுதி மக்கள் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு கடந்த 25 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும் அங்கு அழைக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக செல்ல முடியவில்லை. காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இராணுவச் சோதனைச்சாவடியில் வழிமறிக்கப்பட்ட பொது மக்கள் அங்கிருந்து இராணுவத்தின் வாகனங்களிலேயே ஏற்றிச் செல்லப்பட்டிருந்தனர்.
மறுநாள் மக்கள் தமது காணிகளை பார்வையிடுவதற்காக சென்ற போது காங்கேசன்துறையில் இருந்த சோதனைச்சாவடி முற்றுமுழுதாக அங்கிருந்து அகற்றிச் செல்லப்பட்டிருந்தது. அச் சோதனைச்சாவடியுடன் அமைந்திருந்த சிறிய முகாமிலும் இருந்து இராணுவத்தினர் வெளியேறிச் சென்றிருந்தனர்.
இருப்பினும் நேற்று குறித்த சோதனைச் சாவடி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த உயரமான மதிலுடன் உள்ள மரம் ஒன்றில் மறைமுகமான பாதுகாப்பு அரண் ஒன்றினை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
இவ்வாறு பதிதாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரயில் இராணுவத்தினர் குடிபுகுந்து அவ்வீதியால் சென்றுவரும் வாகனங்களின் விபரங்களை பதிவு செய்து வருகின்றதோடு, பொது மக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் இரகசியமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

K800_IMG_0789 K800_IMG_0790

Leave a comment