யாழ். பழைய பூங்கா அரசகாணியில் குடியிருக்கும் மக்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

341 0
201608250915539530_engineering-college-student-murder-life-sentence-for-4_secvpfயாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதி பகுதியில்  அரச காணிகளில் குடியிருக்கும்  மக்களுக்கு மாவட்ட நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவதுயாழ்ப்பாணம் குருநகர் பழைய பூங்கா வீதியில் குடியிருக்கும் மக்களை வெளியேறுமாறு அப்பகுதி கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் போன்றோரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.குறித்த காணி அரசாங்கத்துக்குரியது எனவே, காணியை விட்டு மக்களை வெளியேறுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் , நாங்கள் 35 வருடங்களாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றோம். இது அரச காணி என்றோ தனியார் உடமை என்றோ எங்களுக்கு யாரும் கூறியிருக்கவில்லை. எந்தவிதமான பெயர் பலகைகளும் போடப்பட்டிருக்கவில்லை. நாங்கள் சோலை வரி, மின் கட்டணங்கள் போன்றன செலுத்தி வருகின்றோம். வாக்காள  அட்டைகள் இந்த விலாசத்திற்கே அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்தநிலையில் திடீர் என்று எம்மை  அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு கிராமசேவையாளர் தெரிவித்திருந்தார். எமக்கான அடையாள அட்டைகள், பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள், இறப்பு சான்றிதழ் போன்றவற்றையும் எமக்கு தர மறுத்தார். நாங்கள் வீடுகளை கட்டி இவ்வளவு காலம் வாழ்ந்து வரும் இப் பகுதியை விட்டு வெளியேறமாட்டோம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் வாழும் ஒவ்வொரு வீட்டினருக்கும் யாழ் மாவட்ட நீதிமன்றம் வருகிற முப்பதாம் திகதி நீதிமன்ற த்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் அப்பகுதியை நில அளவு எடுப்பதற்காக வருகை தந்த நில அளவையாளர்களை அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அதனை கைவிட்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.