ஹிலாரிக்கு 51 சதவீதம், டிரம்புக்கு 39 சதவீதம் மக்கள் ஆதரவு

16079 0

201606271204495767_Clinton-takes-lead-over-Trump-new-polls-show_SECVPFஅமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை 51 சதவீதம் பேரும், டொனால்ட் டிரம்ப்பை 39 சதவீதம் பேரும் ஆதரிக்கக் கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதும் உறுதியாகி விட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக 51 சதவீதம் மக்களும் அவரை எதித்து போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்புக்கு 39 சதவீதம் மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏ.பி.சி. நியூஸ் நடத்திய இந்த கருத்துகணிப்பின்படி, இன்றைய நிலையில் இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் 51 சதவீதம் மக்கள் ஹிலாரியைதான் ஆதரிப்பார்கள் என தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு குழுவினர் சந்தித்த மக்களில் மூன்றில் இரண்டுபேர் நாட்டை ஆள டிரம்ப் தகுதியற்றவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வால் ஸ்டிரீட் ஜர்னல் மற்றும் என்.பி.சி. செய்தி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் டொனால்ட் டிரம்புக்கு 41 சதவீதம் மக்களும் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக 46 சதவீதம் மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், இவர்கள் இருவரைத்தவிர மூன்றாவது வேட்பாளராக ஒருவர் அதிபர் தேர்தலில் குதித்தால், ஹிலாரிக்கு 39 சதவீதம் பேரும், டிரம்ப்புக்கு 38 சதவீதம் பேரும் வாக்களிக்கலாம் என இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

Leave a comment