நாகர்கோவிலில் மோட்டார் குண்டு மீட்பு

244 0

நாகர்கோவில் மேற்கு பகுதியில்  வீட்டு வளவு ஒன்றில் கிணறு வெட்டிய போது மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில்  பொலிஸார் தெரிவித்தனர்.

நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மதியம் வீட்டிற்கு பின்புறம் கிணறு வெட்டிய போது குண்டு ஒன்று தென்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பொலிஸார் அப்பகுதிக்கு சென்ற போது அங்கு காணப்பட்டது 120 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு என தெரியவந்தது.

இதனையடுத்து இன்று புதன்கிழமை (13) பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அப்பகுதி தோண்டப்படவுள்ளது.

Leave a comment