சிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது?

12197 0

காலணி ஆதிக்கத்திலிருந்து ஈழத்தீவானது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி விடுதலைபெற்றது. ஆனால் ஈழத்தீவில் வாழ்கின்ற அனைவருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை.

பிரித்தானியர்களிடம் இருந்து இரத்தம் சிந்தி இந்த விடுதலையானது பெறப்படவில்லை. இந்திய நாட்டில் பல்வேறு வழிகளில் தமக்கான சுதந்திர போராட்டம் நடைபெற்றது. பிரித்தானியர்கள் காலணித்துவ சுரண்டல் முறமைக்கு தம்மை மாற்றிக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது ஈழத்தீவையும் விட்டுச் சென்றனர்.

பல இனங்கள் வாழ்கின்ற இந்த அழகான தீவில் பெரும்பாண்மை இனமான சிங்கவர்களே இந்த சுதந்திரத்தை ஏக போகமாக அனுபவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக பௌத்த பேரினவாத சிந்தனை கொண்ட ஆளும்வர்க்கமே இந்த சுகந்திர தினத்திற்கு உரித்தானவர்கள்.

ஈழத்தீவில் விடுதலைக்காக தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல சிங்கள இளைஞர்களும் இரத்தம் சிந்தினார்கள் .
1971 மார்ச்சில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டதுடன் அவர்கள் . உடல்கள் களனி ஆற்றில் வீசப்பட்டன.

தமிழர்கள் சிறுபாண்மையினர் என ஒடுக்கப்பட்டார்கள். தமக்கான உரிமைகோரி அகிம்சை வழியில் போராடினார்கள். நியாயத்தன்மையை புரிந்து கொள்ளாத பௌத்த தேசம் ஆயுத முனையில் தமிழர்களை அடக்க முற்பட்டபோது தமது இனத்தை காக்க தமிழ் இளையோர் ஆயுதத்தை கையிலெடுத்து தமது இனத்திற்காக களமாடினார்கள்.

தமிழ் போராளிகளின் வீரத்தால் நிலைகுலைந்த சிங்கள தேசம் சர்வதேசத்தின் உதவியால் தமிழர்களின் விடுலைப் போராட்டத்தை அழித்தார்கள்.

பெப்ரவரி மாதம் ஈழத்தீவில் சிறிலங்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்த சுதந்திர தினம் ஈழத்தீவில் வாழ்கின்ற பெருபாண்மை இனமான சிங்களருக்கே சுகந்திர தினமாகும் மற்றவர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு அன்றைய நாள் ஒரு கறுப்பு தினமாகும்.

Leave a comment