இலங்கையில் வரட்சி

488 0

kilinochchi_dry_land_002நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் காணப்படுவதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வரட்சி காலநிலையால் அதிக பாதிப்புக்களை பொலன்னறுவை மாவட்டம் எதிர்கொண்டுள்ளது.

பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் குளங்களில் நீர்மட்டம் விரைவாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நீரை விநியோகிக்கும் நீர்நிலைகளின் நீர் மட்டங்களும் குறைவடைந்துள்ளன.

ரந்தெனியகல நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 40 சதவீதமாகவும், விக்டோரியா நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 60சதவீதமாகவும் குறைவடைந்துள்ளன.

அதுபோல், கொத்மலை, ரண்டம்பே மற்றும் போவதென்ன நீர் நிலைகளில் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளன.

இந்த வரட்சியான கால நிலை காரணமாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி பல்கலைக்கழக மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரையறை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல்கலைக்கழக படநெறிகளுக்கான அனைத்து பரீட்சைகளும் குறித்த காலத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.