பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு ஊடகமையத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஈழமுரசு வாரமpuலர் பிரதம ஆசிரியர் திரு. ஜெய்சந்தர் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின கல்லறை மீது தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்பு செய்யப்பட்டது.
கல்லறைக்கான மலர்மாலையினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் புதல்வியரும் மருமகனும் அணிவித்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு. சுரேஸ், ஈழமுரசு வாரமலர் பிரதம ஆசிரியர் திரு. ஜெய்சந்தர் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
திரு. சுரேஸ் அவர்கள் தனது உரையில், நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் அவர்களின் விடுதலை மீதான பற்றுறுதி தொடர்பாக தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்.
திரு.ஜெய்சந்தர் அவர்கள் தனது உரையில், நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் அவர்களின் 30 ஆண்டுகாலத் தேசியப் பணிகளை நினைவு படுத்தியதுடன், நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் அவர்களை நாம் என்றென்றும் நினைவிருத்தி அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வோம். இதுவரை காலமும் ஒரு குடும்ப நிகழ்வாக கல்லறைமுன் நாம் இந்நிகழ்வை நடாத்தியிருந்தோம். இனிவரும் காலங்களில் அனைவரும் ஒருமித்து நினைவு நிகழ்வுகளாக மக்கள்முன் விரித்துப் பணிதொடர்வோம் எனத் தெரிவித்த அவர், இந்நிகழ்வை ஏற்பாடுசெய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

