முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா பயணம்!

283 0

முதல் வெளிநாட்டு பயணமாக இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது சோலி நேற்று இந்தியா வந்தார். 

மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த மாதம் 17-ந்தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது இந்தியா வருமாறு நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக முகமது சோலி நேற்று இந்தியா வந்தார். அதிபராக பதவி ஏற்றபின் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

டெல்லி விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். மாலத்தீவு அதிபர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

டெல்லியில் மகாத்மா காந்தி சமாதியில் இப்ராகீம் முகமது சோலி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

Leave a comment