கொத்தணிக் குண்டுகள் வீசப்படவில்லை – கோத்தா

5257 10

vanni-cluster-bomb-1தாம் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில், இலங்கை  படைகளால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று உறுதியாக கூற முடியும்.
வெளியிடப்பட்டுள்ள சில ஒளிப்படங்களை மாத்திரம், சான்றாக கருத முடியாது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏனைய ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment