மட்டக்களப்பில் கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்பு

267 0

கடலில் காணப்படும் ஒருவகையான கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் தற்போது கரைவலை மீன்பிடிக்கான பருவகாலமாகும் இதன் அடிப்படையில் தற்போது மட்டக்களபின் கரைவலை தொழிலாளர்கள் தங்களது மீன்பிடி தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரையை அண்டி காணப்படும் ஒருவையான கடற்பாசி காரணமாக தங்களது தொழிலினை சரியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக குறித்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடற்கரையில் கூடுதலான கடற்பாசி மீன்பிடி வலையில் சிக்கியதை அவதானினக்க கூடியதாக இருந்தது.

அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்

நாங்கள் வருடத்திற்கு ஒரு முறையே  இந்த கரைவலை மீன்பிடி தொழிலில் மேற்கொள்ள முடியம் இம்மாதமே இக் கரைவலை மீன்பிடி தொழிலினை மேற்கொள்ள கூடிய பருவகாலமாகும். இருந்தும் இம்முறை என்றும் இல்லாதவாறு ஒரு புதுவகையான கடற்பாசி காணப்படுகின்றது.

நாங்கள் மீன்களை பிடிக்க வலை வீசினால்  எங்களுக்கு மீன்களுக்கு பதிலாக இந்த கடற்பாசியே கிடைக்கின்றது. இது பொருமளவில் வலையில் சிக்குகின்றது. இதனால் வலையும் சேதமாகுவதுடன்  தொழிலாளர்களையும் களைப்படைய செய்வதுடன் தொழிலில் ஆர்வமின்மையையும் ஏற்படுத்துகின்றது.

எமது மீன்பிடி வரலாற்றில் இவ்வகையான கடற்பாசியை கண்டத்தில்லை இருந்தும் இம்மாதாம் முழுவதும் இவ்வாறான நிலை ஏற்படுமாயின் இத்தொழிலினை நம்பிவாழும் ஆயிரக்கணக்கான மீனவகுடும்பங்கள் பாதிக்கப்படும் என அவர்கள் இதன்போது தெரிவிக்கின்றனர்.

Leave a comment