தேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு முன்னாள் அதிபர் வழக்கு!

3 0

மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது. 

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்.

58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலி வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த  பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
முஹம்மது சோலி

இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த தில்லுமுல்லுவினால் முஹம்மது சோலி  58.4 சதவீதம் வாக்குகளை பெற்றதாக அறிவித்த தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக யாமீன் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

பிரிட்டனில் சாலை விபத்து- இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

Posted by - January 18, 2019 0
பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இளவரசர் பிலிப் காயமின்றி தப்பினார். பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான…

டோங்கா தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு 

Posted by - August 19, 2017 0
பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான டோங்காவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி சாலைகளில்…

இந்தியாவில் தாக்குதல்

Posted by - November 30, 2016 0
இந்தியாவின் – ஜம்மு-காஷ்மீரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர்…

லண்டனில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளியாக்கப்பட்ட மாணவி

Posted by - August 14, 2018 0
அன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்வி கற்கும் ஆர்வத்தில் ரோமானியாவிலிருந்து லண்டன் வந்தார். கல்விக்கான ஏக்கம் கண்களில் விரிய லண்டனுக்கு வந்த அவரின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. கல்விக்காக…

இந்தியாவுக்கு ஐ.எஸ். அச்சுறுத்தல்

Posted by - January 3, 2017 0
இந்தியாவின் கிழக்கு எல்லைகளின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸில் இயங்கும் அல் ஜமாத் உல் முஜாஹீடீன் பங்களாதேஸ் அமைப்பினர், இதற்கான…

Leave a comment

Your email address will not be published.