மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிப்பு

1 0

மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து நேற்று மாலை முதல் 5 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 103.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 103.61 அடியாக உயர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Related Post

6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்: கூடுதல் போலீஸ் கமிஷனர்

Posted by - September 6, 2017 0
6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா தெரிவித்தார்.

நாளை சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted by - February 7, 2017 0
தமிழக முதல்வராக சசிகலா இன்று பதவியேற்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்று விட்டதால் பதவியேற்பு விழா ரத்து…

கனடா நாட்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைகிறது ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted by - June 29, 2018 0
அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமன ஆணை

Posted by - August 19, 2017 0
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 62 பேர் சைதை துரைசாமியின்…

Leave a comment

Your email address will not be published.