அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி – பிரெட் கவனாக் வெற்றி!

212 0

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.

இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தன.

இதையடுத்து அவர் மயிரிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் நீதிபதியாக பதவி ஏற்பது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது.

Leave a comment