பூமியின் சாம்பியன் என்றால் என்ன?

318 0

ஐ.நா.சபை 2005-ம் ஆண்டு முதல் பூமியின் சாம்பியன்(சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்) என்னும் விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. 

ஐ.நா.சபை 2005-ம் ஆண்டு முதல் பூமியின் சாம்பியன்(சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்) என்னும் விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த விருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் தீவிரமாக செயல்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பூமியின் சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் முக்கியம்.

மேலும் வறுமை, சுகாதாரம், உணவு, விவசாயம், குடிநீர், எரிசக்தி, துப்புரவு, மனித குடியேற்றம், பருவ நிலை மாற்றம், நுகர்வு மற்றும் உற்பத்தி, கடல்கள், பிராந்திய சுற்றுச்சூழல் அமைவு உள்ளிட்ட 17 முக்கிய அம்சங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விருதுக்கு 5 முதல் 7 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

கொள்கை தலைமை, அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் நோக்கு, உத்வேகம் மற்றும் செயல்பாடு, வாழ்நாள் சாதனை என 5 பிரிவுகளில் பூமியின் சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடிக்கு கொள்கை தலைமை என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை கடந்த காலங்களில் ருவாண்டா அதிபர் பால் ககாமே, யுனிலீவர் நிறுவன தலைவர் பால் போல்மேன், கடல் ஆராய்ச்சியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சில்வியா ஈர்லி உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

Leave a comment