மனித எச்சங்களில் 30 வீதத்தையே மீட்டுள்ளோம்- ராஜ்சோமதேவ

204 0

மன்னார் மனித புதைகுழியிலிருந்து  இதுவரை 30 வீதமான மனித எச்சங்களை அகற்றியுள்ளதாக புதைகுழியை அகழும் நடவடிக்கைகக்கு பொறுப்பாகவுள்ள பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்.

தனது குழுவினர் மேலும் ஒரு மாத காலத்திற்கு அகழும் பணிகளை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித புதைகுழியை ஆராய்ந்தவேளை மேலும் பல மனித எச்சங்கள் உள்ளே காணப்படலாம் என்ற முடிவிற்கு வரமுடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 148 மனித எச்சங்களை மீட்டுள்ளோம் இவற்றில் 17 சிறுவர்களுடையவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித புதைகுழியை அகழும் நடவடிக்கையின் போது நானும்  சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்சவும் சில பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம் எனவும் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை வெளிநாட்டிற்கு  மேலதிக ஆய்விற்காக அனுப்புவதற்கான நிதி குறித்த பிரச்சினை இன்னமும்  தீர்க்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நிதி உதவி குறித்து சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளோம்,வெளிநாடுகளில் இடம்பெறும் ஆய்வுகூட பரிசோதனைகளிற்கு உதவி வழங்க தயார் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வாய்;மூல உத்தரவாதத்தை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment