மாந்தீவில் கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகள் அகற்றப்பட்டன

16332 67

மாந்தீவில் கொட்டப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை மாந்தீவில் கொண்டு கொட்டியதனால் மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்

அந்த வகையில் இன்று 30 ஆம் திகதி வைத்தியசாலை ஊழியர்களும் இராணுவத்தினரும் சேர்ந்து கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் நடவடிக்கை பாரிய பிரச்சனையாக இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி குறித்த கழிவுகள் அகற்றப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment