இஸ்லாமுக்கு எதிரானது என இடிக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம்

9907 0

மாலத்தீவில் அமைக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் இஸ்லாமுக்கு எதிரானது என மதகுருக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இடிக்கப்பட்டு வருகிறது. 

சுற்றுலா நாடான மாலத்தீவில் கடந்த ஜூலை மாதம் உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. கடலுக்கு மேலேயும், கடலுக்கு அடியிலும் இருக்கும் வண்ணம் இந்த அருங்காட்சியகம் பல சிலைகளுடன் மிக நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இயற்கை சூழல் காரணமாக கடலில் நீர் மட்டம் குறையும் போது கடலுக்கு அடியில் இருக்கும் சிலைகள் மேலே தெரியும்.
இந்நிலையில், இந்த அருங்காட்சியம் இஸ்லாம் மதத்திற்கு எதிராக உள்ளதாக அந்நாட்டில் உள்ள மத குருக்கள் குற்றம் சாட்டி வந்தனர். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகம்மது வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து, தற்போதைய அதிபர் அப்துல்லா யாமின், அருங்காட்சியத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, அதில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன.
இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய பிரிட்டன் சிற்பி ஜேசன் டிகேய்ர்ஸ் டெய்லர் கூறுகையில், “அந்த சிலைகள் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. கலையை பிரதிபலிக்கிறது அவ்வளவே” என தெரிவித்துள்ளார்.

Leave a comment