“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது!”

1 0

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகி திலீபனின் தியாகம் ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகம். போராட்ட வராற்றில் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்ட சக்கரம் சூழன்று செல்வதற்கு அச்சாணியாக இருந்தது மட்டுமல்ல ஒவ்வொரு புதிய சூழற்சிக்கு உதாரண புருசராக இருந்தார்.

தியாகி திலீபன் இந்திய அரசாங்கத்திடம் நீதி கேட்டு சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அதே இந்தியாவிடம் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் 1986 நவம்பர் நடுப்பகுதியில் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் என்பது வரற்றில் ஒரு பக்கம்.

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் நீர் கூட அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டது போலவே தியாகி திலீபனும் மேற்கொண்டார்.

உண்ணாவிரத்திற்கு முன்பாக தியாகி திலீபன் ஆற்றி உரையில் ”“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது!” என ஆணித்தரமாக கூறினார். இது தான் உண்மையாக செய்தி  இன்று எமது மண்ணில் எமது இராணுவம் இல்லை. எமது மண் ஆக்கிரமிப்பாளர்களால் மிகத் துல்லியமாக திட்டமிட்டு
அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

எமது நாட்டில் எமது இராணுவம் இல்லாமையால்

1) பாலியல் வல்லுறவுகள்
2 )சிறுவர் துஸ்பிரயோகங்கள்
3) போதைப்பொருள் பாவனைகள்
4) கொள்ளைகள்/ களவுகள்
5) கொலைகள்
6 )ஏமாற்றுவேலைகள்
7)மோடிகள்
8) வாள்வெட்டுக்கள்
9 )இலஞ்சம்
10) சமூக புறழ்வுகள்

என இன்னொர் அன்ன சமூக சிரழிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.சிறிலங்கா அரசாங்கத்தின் இனத்துவேசம் மட்டுமல்ல தமிழ் அரசியல் வாதிகள் பலரின் சுய நலம் மக்கள் நலத்தை விழுங்கி விடுகின்றது. எனவே, தியாகி திலீபனின் தீர்க்கதரிசனமான வார்த்தை ”“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது!” என்பதே நிதர்சனம்.

Related Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்?

Posted by - September 17, 2018 0
இன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கான அடிப்படை உரிமை…

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

Posted by - January 1, 2017 0
உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின்…

உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு! ஆசிரியர் – குறியீடு இணையம்

Posted by - October 27, 2016 0
யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் சதித்திட்டத்தின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளது.…

அமெரிக்கா கொன்ற மக்களுக்கு அஞ்சலி செலுத்துபவர் தனது இனத்தால் கொல்லபட்டவர்களுக்கு என்ன செய்தார்?

Posted by - March 15, 2018 0
”நல்லாட்சி” எனக்கூறப்படும் ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமுறை பயணமாக ஜப்பானுக்கு தன் துணைவியாருடன் சென்றுள்ளார்.

கடந்து செல்லும் 2017 – வரவேற்கும்2018 !

Posted by - December 29, 2017 0
 கிழக்கில் கதிரவன் தன் பொற் கரங்களை நீட்டி 2017 ஆம் ஆண்டை வரவேற்றான்.வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பே தமிழர் தாயகம். அந்த கிழக்கில் கதிரவனுக்கு நன்றி செலுத்தும்…

Leave a comment

Your email address will not be published.