மார்ச் 2019ல் ஐநா தீர்மானம் முடிவடைகிறது, அடுத்த படியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

582 0

ஐக்கிய நாடுகள் சபையின் 39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கிறது.இவ் வேளையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையாலும் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தாலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாகவும் வேற்றின பொது அமைப்புகளிடம் சிறிலங்காவின் போலி முகத்தை அம்பலப்படுத்தவும் “மார்ச் 2019ல் ஐநா தீர்மானம் முடிவடைகிறது, அடுத்த படியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன? ” எனும் தலைப்பில் பக்க அறை நிகழ்வு நாளைய தினம் மதியம் 2 மணிக்கு ஒழுங்குசெய்யப்படுள்ளது. இவ் நிகழ்வில் புலம்பெயர் இளம் தமிழ் மனிதவுரிமையாளர்கள் மற்றும் சடடத்தரணிகள் கலந்துகொண்டு உரைகள் ஆற்றவுள்ளனர்.

39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை மனிதவுரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஜெனிவாவில் உள்ள தூதரகங்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வாரம் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் எஸ்டோனியா நாடுகளின் ராஜதந்திரிகளுடன் அரசியல் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக தமிழர் தாயக நிலப்பரப்பில் தொடரும் சிறிலங்காவின் “நல்லாட்சி” அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்பாகவும் முக்கிய விடயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட நாடுகள் இம்முறை பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவேண்டும் என்பதையும் கோரப்பட்டது.

Leave a comment