மாந்தை பிரதேச சபை தலைவர் வரட்சியிவ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்

225 0

மந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வரட்சியின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட பெரியமடு , முள்ளிக்குளம் , சின்ன வலயன்கட்டு , இரனை இலுப்பக்குளம் , பரிசன் குளம் , கீரிச் சுட்டான் ,விலாத்திக்குளம் , கல் மடு , போன்ற கிராம மக்கள் இவ்வாறு வரட்சியினால் பாதீப்படைந்துள்ளனர்.

அந்த கிராமங்களில் உள்ள மக்களை நேற்று சனிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் ஆ.இசந்தியோகு நேரில் சென்று சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதன் போது தாம் கடும் வரட்சியின் காரணமாக பாவனைக்கும் , குடிப்பதற்குமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமது கிராமங்களுக்கான  போக்குவரத்து , வைத்தியப் பிரச்சனை தொடர்ச்சியாக காணப்படுவதோடு, வரட்சி நிவாரணம், வாழ்வாதார திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பல்வேறு    குறைபாடுகளை தெரிவித்தனர்.

மக்களின் குறைகளை கேட்டரிந்த மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் மிக அவசர தேவையாக உள்ள குடிநீர் மற்றும் வீதி புனரமைப்புகளை உரியவர்களிடம் பேசி உரிய காலத்தில் தீர்த்து வைப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment