வவுனியாவில் அரச பஸ்ஸில் கேரளா கஞ்சாவுடன் பயணித்தவர் கைது

39 0

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை சோதனையிட்ட போது 8 கிலோ 402 கிராம் கேரளா கஞ்சா கடத்திய  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த பஸ் சோதனையிடப்பட்டுள்ளது.

யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ்ஸில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பஸ் சோதனையிடப்பட்டது.

இதன்போது கேரளா கஞ்சாவுடன்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொச்சிக்கடை – மாதசெறிய  பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.