முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையிடுகின்றார்-சுமந்திரன்

12 0

இலங்கையின் முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியினரின் விசாரணைகளில்  நேரடியாக தலையிடுவதன் காரணமாக வேறு வழியில்லாமல் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணையை கோரவேண்டியுள்ளது என சுமந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியொருவரே இந்த விவகாரத்தில் தலையிடுவதன் காரணமாக  உள்ளுர் நீதிப்பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள்   கடத்தப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாகயிருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன மீது சிஐடியினர் குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிடுகின்றார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் படுகொலை தொடர்பில் பல வழக்குகள் இன்னமும் நீதிமன்றின் முன்னாள் உள்ளன, இந்நிலையிலேயே ஹெட்டியாராச்சி தலைமறைவானார் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தவிர 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் பிரதானியொருவர் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமல் மெக்சிக்கோ சென்றிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் முப்படைகளின் பிரதானி தொடர்பில் தற்போது எழுந்துள்ள குழப்பநிலைக்கு சிறினேச பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி படையினர் விவகாரங்களில் தலையிட்டுள்ளமை பொறுப்புக்கூறலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நீதிசெயற்பாடுகளில் ஜனாதிபதியொருவர் தலையிடுவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ள சுமந்திரன் முப்படைகளின பிரதானி விவகாரம் உயர்மட்டத்தில் காணப்படும் அரசியல் தலையீடுகளை புலப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை படையினரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அடிப்படையிலும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் ஜனாதிபதியே விசாரணைகளில்  தலையிடுவதால் உரிய நீதி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக ஐநா தலையிடவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Post

‘பிரபாகரன் சந்தர்ப்பங்களை தவறவிட்டவர்’ – டக்ளஸ் தேவானந்தா

Posted by - January 24, 2017 0
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த போதும், அவர் அதனை பயன்படுத்தவில்லை” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலரும்…

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு: இறப்பிற்கான காரணம்?

Posted by - April 5, 2019 0
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த புதன் கிழமையன்று, கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 4ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியைச்…

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - March 13, 2017 0
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அவுஸ்ரேலியாவில் உள்ள…

நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை(காணொளி)

Posted by - January 20, 2017 0
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை இன்று மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய நெடுந்தாரகை படகு சேவை இன்று காலை வைபவ…

10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - December 27, 2017 0
கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் 10 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முல்லைதீவு நோக்கி குறித்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயற்சித்த வேளையில்…

Leave a comment

Your email address will not be published.