எல்சல்வடார் முன்னாள் அதிபருக்கு 10 ஆண்டு சிறை – சொத்து குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு

21 0

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் அதிபர் ஆன்டனியோ சாகாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. 

மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் நாட்டில் 2004-2009 ஆண்டுகளில் அதிபராக பதவி வகித்தவர், ஆன்டனியோ சாகா (வயது 53). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தனது மகன் திருமணத்தின்போது 2016 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த நாட்டு அரசுக்கு 260 மில்லியன் டாலர் தொகையை (சுமார் ரூ.1,872 கோடி) அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த ஊழலில் சிக்கிய ஆன்டனியோ சாகா அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு முதல் 16 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Related Post

வடகொரியாவுடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை – சி.ஐ.ஏ இயக்குநர்

Posted by - August 14, 2017 0
வடகொரியாவுடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குநர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். வடகொரியா உடனான ராணுவ ரீதியிலான மோதலுக்கு…

ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் நுழைத்தது – பிரான்ஸ் முன்னாள் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு

Posted by - September 22, 2018 0
ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்ததால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே இன்று குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி அபு துஜானா சுட்டுக் கொலை

Posted by - August 1, 2017 0
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி அபு துஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்

Posted by - July 13, 2016 0
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் அதிக வசிக்கும் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 11 பேர் வரை பலியாகினர். சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.…

மோடி செயலி தகவல்கள் சர்ச்சை – அமெரிக்க நிறுவனம் விளக்கம்

Posted by - March 28, 2018 0
மோடி செயலி சர்ச்சை தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆனந்த் ஜெயின், தனது வலைப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Leave a comment

Your email address will not be published.