நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர்-கி.ஜெயசிறில்

236 0

இந்த நாட்டில் இடம்பெற்ற கொடுங்கோலாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து  நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர் எனத் தெரிவித்த காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், பொத்துவில் தமிழ் மக்களது அவலக்குரல் ஒரு மாதகாலமாக ஒலிக்கின்ற போதிலும் இன்னும் நல்லாட்சியின் செவிகளுக்கு ஏறவில்லையா? அரசியல்வாதிகள் தூங்குகின்றார்களா? எனவும் தெரிவித்தார்.

அம்பாறை, தென்கோடியிலுள்ள பொத்துவில் 60 ஆம் கட்டை கனகர் கிராம தமிழ் மக்களது காணிமீட்புப் போராட்டம் இன்றுடன் (13-வியாழக்கிழமை)  ஒருமாதகாலம் பூர்த்தியாவதையொட்டி அப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் கூறுகையில்,

அம்பாறை, தென்கோடியிலுள்ள பொத்துவில் 60 ஆம் கட்டை கனகர் கிராம தமிழ் மக்களது காணிமீட்புப் போராட்டம் இன்றுடன் (13-வியாழக்கிழமை)  ஒருமாதகாலம் பூர்த்தியாவதையொட்டி அப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் கூறுகையில்,

தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலத்தைக் கோரி இவர்கள் கடந்த 31 தினங்களாக வீதியோரத்தில் முகாமிட்டு வெயிலிலும் பனியிலும் இரவுபகலாக மனவைராக்கியத்துடன் போராட்டத்தில் ஈபட்டுவருகின்றனர்.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளை  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க உறுதி கூறியுள்ள நிலையிலும் போராட்டம் இன்று 31 ஆவது நாளாகத் தொடர்கிறது.

இதேபோன்று மாற்று இனமொன்றின் மக்கள் குழாமொன்று ஒருநாள் வீதியிலிறங்கினால் ஊடகங்கள் தொடக்கம் அரசியல்வாதிகளின் பார்வை அங்கு குவிந்திருக்கும். அவசரமாக அமைச்சர்களும் பேசுவார்கள். எம்.பிக்களும் பேசுவார்கள். தீர்வ கிட்டியிருக்கும்.

ஆனால் இங்கு ஒரு மாதகாலத்திற்கும் மேலாக போராடிவருகின்றபோதிலும் இன்னும் தீர்வு கிடைக்காதது வேதனைக்குரியது. நாதியற்ற சமுகமாக தமிழ்ச் சமுகமிருப்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. எமது தமிழ் அரசியல்வாதிகளும் தூங்குகின்றார்களா? என்று எண்ணத்தோன்றுகின்றது.

மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கூறுங்கள். உதவலாம் என்றார்.

மக்கள் கூறுகையில்: எமது போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒருமாதகாலமாகின்றது. இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. அதற்காக நாம் சலிக்கவில்லை. சளைக்கவில்லை.எமது அரசியல்வாதிகள் வெறும் அறிக்கைமன்னர்களாக உள்ளனரே தவிர எதையும் சாதித்தாகத்தெரியவில்லை.

30 நாட்களல்ல 300 நாட்கள் சென்றாலும் இந்தஇடத்திலேதான் இருப்போம். எதுவரினும் நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர நிலத்தைமீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது  என்றனர்.

Leave a comment