கூட்டமைப்பினர் பதில் வழங்கவேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

7279 0

ஜக்கிய நாடுகள் சபையில் இராணுவத்தினரை தண்டிக்காது தடுக்கும் நோக்கில் ஒருதீர்மானமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவரவுள்ளமை தொடர்பில், இந்த அரசுக்கு கால அவகாசம் வழங்கிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன்,

தமிழ்மக்களுக்கான அரசமைப்பினை வரைவதற்கு தனிநபரான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனுக்கு அதிகாரம் வழங்கியமை தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும், கூட்டமைப்பின் தலைவரும் பதிலளிக்கும் காலம் நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசமைப்பு உருவாக்கப்போவதாக தெரிவித்து, இந்தியாவிடம் உதவி கேட்கும் தமிழ்த்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் தமிழர்கள் தம்மைதாமே ஆளும் சுயாட்சிப்பொறிமுறையுடன் அது வருமா என்பது தொடர்பில் கருத்து வெளியிடவேண்டும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் உள்ள தனது வீட்டில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment