விடிகின்ற நாளுக்காய் விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

377 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது.

ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கான தமிழ்வான் கண்காட்சி ஊர்திப்பயணம் இன்றைய தினம் டென்மார்க் தலைநகரத்தில் தரித்து நின்று கண்காட்சியை நிறுவி துண்டுப்பிரசுரம் வழங்கி வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்தது. இன்றைய கவனீர்ப்புப்போராட்டம் Denmark தலைநகர் Copenhagen இல் துண்டுப்பிரசும் மூலமும் இரண்டு அரசியல் சந்திபுகளினூடாகவும் முன்னெடுக்கப்பட்டது. தமிழின ளிப்புக்கு நீதி கோரும் மனுவை Holbæk மேயரிடமும் (அவரின் காரியதர்சி ஊடாக) மற்றும் டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர் Eva Flyvholm இடமும் கையளிக்கப்பட்டது.அத்தோடு டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினரோடு சந்திப்பை மேற்கொண்டதன் பிற்பாடு தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவுக்குரலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் தமிழ் வான் கண்காட்சி யேர்மன் தலைநகர் பேர்லினில் தனது செயற்பாட்டினை முன்னெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

எதிர்வரும் 14.09.2018 அன்று கனடா தேசத்திலும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் கவனயீர்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அந்தவகையில் எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும்வரை எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம்.

Leave a comment